திசை மாறா பயணம்
இயேசுவின் எருசலேம் நோக்கிய பயணத்தில் நடந்த ஒரு உறையாடலில் அவரைப் பின்தொடர்வதுபற்றிய சில கருத்துக்கள் இங்கே பரிமாரப்படுவதைப் பார்க்கிறோம். நிலை வாழ்வு பெற, எல்லோருமே எருசலேம் பயணத்தில் பங்குகொள்ள வேண்டும். “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” லூக் 9’23. ஆகவே, தப்பமுடியாது, தவிர்க்க முடியாது, மாற்று வழிகிடையாது.
நீயும் நானும் விரும்புவதுபோல அப்பயணம் அமைவதில்லை. சில சமயங்களில் நாம் விரும்பாதவைகள் வசதி குறைவுகள் குறுக்கிடலாம். நம் வாழ்க்கைப் பயணத்தில் இவைகளை நாம் ஏற்று வாழத் தொடங்கும்போது இயேசுவோடு நாம் எருசலேம் பயணம் மேற்கொள்ளுகிறோம்.
இந்த எருசலேம் பயணத்தில் சில நேரங்களில் சில முடிவுகள் நம்மேல் சுமத்தப்படலாம். “இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்” (லூக் 9:60)
மொத்தத்தில் எருசலேம் பயணம் ஒரு கலப்பையில் கை வைத்து உழுகின்ற சிறப்பான தொழில். பின்னால் திரும்பிப் பார்த்தால் தொழிலில் சுத்தம் இருக்காது. கவனம் சிதறும். பாதை மாறும். பல சிக்கல்கள் வந்துவிடும். திரும்பிப்பார்த்த லோத்தின் மனைவி உப்புத் தூணாய் மாறிய கதைதான்.(தொடக் 19:26)
இயேசுவின் வழிகாட்டுதலை மனதில் கொண்டு வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம். அது எருசலேம் பயணம்போல வெற்றியில், மகிமையில் முடியும்.
–அருட்திரு ஜோசப் லீயோன்