சொந்தக்காரர்களின் சுகம் விசாரியுங்கள்…
லூக்கா 1:39-45
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
பழைய காலம் நாம் சோ்ந்தே வாழ்ந்தோம். நம் உறவினர்களை தினமும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. இப்போது உள்ள காலக்கட்டத்தில் நாம் தனித்தீவுகளாக வாழ்கிறோம். நம் சொந்தக்காரர்கள் பெரும்பாரும் நம் அருகில் இருப்பதில்லை. தொழில், படிப்பு காரணமாக வேறு இடங்களில் வாழ்கிறார்கள். இப்படி வாழும் நாம் நம் சொந்தங்களின் சுகம் பற்றி விசாரிக்க நேரம் ஒதுக்குவதில்லை. இன்றைய வாசகத்தில் அன்னை மரியாள் நமக்கு மாதிரியாக திகழ்கிறாள். சொந்தங்களை நாடி தேடி போகச் சொல்கிறார். நலம் விசாரிக்க சொல்கிறார். செய்வோம் இரண்டு வழிகளில்:
1. பரிசோடு பார்ப்போம்
நாம் நம்முடைய சொந்தங்களோடு நல்ல உறவில் இருப்பது மிகவும் சிறந்தது. அவர்கள் நமக்கு மிகவும் உதவி செய்தவர்கள். நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆகவே இன்றைய நாளில் அவர்களை நேரில் சந்தித்து பேச வேண்டும். அவர்களின் உடல்நலம், வாழ்க்கைத்தரம், பொருளாதர நிலைமை ஆகியவற்றை விசாரிக்க வேண்டும். கிறிஸ்மஸ் பரிசு கொண்டு சென்று அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்த வேண்டும்.
2. அலைபேசியில் ஆனந்தம் கொடுப்போம்
நேரில் சந்தித்து பார்த்து நலம் விசாரிப்பது தான் நாம் கட்டாயம் செய்ய வேண்டும். அப்படி நேரில் சந்தித்து பேச முடியாத சூழ்நிலை இருப்பின் அலைபேசியில் அழைத்து நம்முடைய ஆனந்தத்த கொடுக்க வேண்டும். ஆச்சரிய ஆனந்தத்தை வழங்க வேண்டும். அவர்களின் உடல்நலம், வாழ்க்கைத்தரம், பொருளாதர நிலைமை ஆகியவற்றை விசாரிக்க வேண்டும். கிறிஸ்மஸ் பரிசு மற்றும் வாழ்த்துக்களை அனுப்பி வைத்து அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்த வேண்டும்.
மனதில் கேட்க…
3. பரிசோடு நான் என் உறவினரை சந்திக்க என்ன பரிசு வாங்கலாம்?
4. அலைபேசியில் அத்தனை உறவுகளையும் புதுப்பித்து மகிழ்வை கொண்டாடலாம் அல்லவா?
மனதில் பதிக்க…
உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று (லூக் 1:44)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா