சாட்டை அவசியமா?
இங்கே பயன்படுத்தப்படும் “கோயில்” என்ற வார்த்தை நான்கு வித பொருள் கொடுப்பதைக் காண்கிறோம்.
1. எருசலேம் தேவாலயம்பற்றியது.
2.இயேசு தன் உடலை ஆலயம் எனக் குறிப்பிடுவது.
3.திருச்சபை கிறிஸ்துவின் மறையுடல்.
4.நம் ஒவ்வொருவரின் உடலும் தூய ஆவியின் ஆலயம்.
இந்த நான்கும் தந்தை இறைவனின் இல்லங்கள். இவற்றை சந்தையாக்குவதை மகனால் ஏற்றுக்கொள்ள முடியாது. “உமது இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும்” என்ற மறை நூல் வாக்கு உண்மையாகிறது. எனவே சாட்டை பின்னி, எல்லோரையும் துரத்துகிறார். காசுகளைக் கொட்டி மேசைகளை கவிழ்த்துப்போட்டார்.
இந்த ஆலயங்களை நாம் எவ்வாறெல்லாம் சந்தையாக்குகிறோம். நம் ஆலயங்களைப் பயன்படுத்தாதபோதும் தவறாக பயன்படுத்தும்போதும்; நற்கருணை அருட்சாதனத்தில், திருப்பலியில் பங்குகொண்டு அவரை மகிமைப்படுத்தாதபோதும்,அவசங்கைகள் செய்கின்றபோதும்; திருச்சபைக்கும் திருத்தந்தைக்கும் எதிராகச் செயல்படும்போதும் நம் உடலை பாவச் செயல்களில் ஈடுபடுத்தும்போதும் இந்த ஆலயங்களை சந்தையாக்குக்றோம்.
இயேசு சாட்டை எடுக்கும் முன், புதுப்பிப்போம். புதிய ஆலயமாக்குவோம்.
~அருட்திரு ஜோசப் லியோன்

