கொரட்டூர் அற்புதக் குழந்தை இயேசுவின் பக்தியின் துவக்கம்
1986-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வியாழன் மாலைத் திருப்பலிகளில் பக்தர் ஒருவர் குழந்தை
இயேசுவின் சிறிய சுரூபம் ஒன்றை காணிக்கையாக கொடுத்தார்.அன்று முதல் ஒவ்வொரு முதல்
வியாழன் அன்று மாலைத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. 1990-ஆம் ஆண்டு புதிய ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது 14.04.1990 அன்று அற்புதக் குழந்தை இயேசுவின் பெரிய சுரூபம்,இன்னுமொரு
பக்தரால் காணிக்கையாக வழங்கப்பட்டது.அதே வருடத்தில் குழந்தை பாக்கியம் பெற்றதற்காக
ஒரு குடும்பம் நன்றியறிதலாக குழந்தை இயேசு சுரூபம் கொடுக்கப்பட்டது.அச்சுறுபம் ஜீபிலி ஆண்டு
2000 நினைவாக கெபி ஒன்று கட்டி அதில் அர்ச்சிக்கப்பட்டது.வியாழன் தோறும் கெபியின் முன்னால்
நவநாள் சேபிக்கப்பட்டு அதன்பின் ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.அந்த வருடத்திலிருந்து மாதத்தின் முதல் வியாழன் காலை 11.00 மணிக்கு சிறப்புத் திருப்பலி ஆரம்பிக்கப்பட்டது.திருப்பலியி
சீர்படவும் தடைப்பட்ட திருமணங்கள் நடைபெறவும் மன்றாட்டுக்கள் வாசித்து ஜெபிக்கப்படுகின்றன.
மந்தரித்த என்னை பூசி ஜெபிக்கப்படுகிறது.
கொரட்டூர் குழந்தை இயேசுவின் பக்தி நாளுக்கு நாள் பெருகி சுற்றயுள்ள பகுதிகளான பாடி,மன்னூர் பேட்டை ,அம்பத்தூர் ,ஆவடி ,பட்டாபிராம் ,முகப்பேர்,சிட்கோ நகர் ,வில்லிவாக்கம், சீனிவாசநகர்
அயனாவரம்,அண்ணாநகர் போன்ற இடங்களில்யிருந்து பக்தர்கள் வந்து தங்கள் குறைகளை அற்புதக்
குழந்தை இயேசுவின் பாதங்களில் சமர்ப்பித்து மன ஆறுதல் பெற்றுச் செல்லுகிறார்கள்.தாங்கள் அடைந்த நன்மைகளுக்காக குழந்தை இயேசுவுக்கு காணிக்கை செலுத்திச் செல்லுகின்றார்கள்.
இவ்வாறாக கொரட்டூர் அற்புதக் குழந்தை இயேசுவின் ஆலயத்தில் பக்தி பெருகி வருகின்றது.