கடவுளின் இரக்கம்
மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!
கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக!
கடவுளுடைய அரசு பெரிதாக வேண்டும், உலகின் அனைத்து மக்களும் கடவுளைப் போற்றிப் புகழ வேண்டும் என்ற ஆசை இன்றைய திருப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றிலும் மிளிர்வதை நம்மால் உணர முடியும். பின்னால் நடக்க இருப்பவற்றை, முன்பே ஆய்ந்து உணர்ந்து சொல்கிற இறைவாக்கின் ஒரு பரிமாணமாக வெளிப்படுவதுதான் இந்த திருப்பாடல்.
உண்மையான மகிழ்ச்சி நமக்கு கடவுளின் இரக்கத்தில் தான் இருக்கிறது என்பதோடு, இந்த திருப்பாடல் தொடங்குகிறது. எனவே, பாவிகளாகிய இருக்கிற நம் அனைவருக்கும் கடவுளின் இரக்கம் வேண்டும். இதன் மூலம் உண்மையான மகிழ்ச்சியை நாம் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற தன்சிந்தனை தான் முதல் வார்த்தை. தனக்கானதோடு இந்த தேடல் நின்றுவிடாமல், இந்த உலகத்தில் இருக்கிற அனைவரும் இந்த மகிழ்ச்சியைப் பெற வேண்டும் என்கிற பரந்துபட்ட எண்ணம், நமக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.
நான் மட்டும் தான் வாழ வேண்டும் என்று எண்ணுகிற உலகத்தில், நானும் வாழ வேண்டும், மற்றவர்களும் என்னைப்போல வாழ வேண்டும் என்கிற பரந்துபட்ட சிந்தனையை நாமும் வளர்த்துக்கொள்ள இந்த திருப்பாடல் நம்மைத் தூண்டட்டும்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்