கடவுளின் ஆட்சியையும்,அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுவோம். மத்தேயு 6:33.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

நாம் நமது கடவுளின் ஆட்சியை தேடுவோமானால் அவரும் நம்முடைய சுகவாழ்வுக்கு கட்டளையிடுவார். ஒவ்வொருநாளும் காலையில் எழுந்து முதலாவது அவரை தேடி நம் தேவைகளை அவரிடம் ஒப்புக்கொடுத்தால் அவர் நம்மை நாம் நடக்க வேண்டிய வழியில் வழிநடத்துவார். நம்முடைய தேவைகள் யாவையும் சந்திப்பார்.இப்படிச் செய்வதால் நாமும் விண்ணகத் தந்தையின் மக்களாக ஆவோம். நாம் வேண்டுவது யாவையும் நமக்கு சேர்த்துக்கொடுக்கப்படும். நமக்குள்ளதை பிறர்க்கு பகிர்ந்து கொடுப்போம்.நம்மால் ஆனா உதவிகளை பிறர்க்கு செய்வோம். இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் அவர் ஒவ்வொருவரையும் தேடிச் சென்று அன்பு செய்து உதவிகளையும் செய்தார். நாமும்  அவ்வாறு நடப்போம்.

நாம் உயிர் வாழ எதை உண்பது எதை குடிப்பது? என்று கவலைப்படத்தேவையில்லை. உணவைவிட உயிரும், உடையைவிட உடலும் உயர்ந்தது அல்லவா? வானத்து பறவைகளை பாருங்கள். அவை விதைப்பதும் இல்லை, அறுப்பதும் இல்லை, களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை.நமது தந்தை அவற்றுக்கு உணவு அளிக்கிறார். அவற்றைவிட நாம் மேலானவர்கள் அல்லவா!நமது தேவைகளை கொடுப்பார். ஆனால் நாம் நமது நம்பிக்கையில் ஒருபோதும் குறைந்து விடாதபடி இருக்க வேண்டும். நம்பிக்கையோடு கேட்டால் நிச்சயம் நமக்கு கிடைக்கும்.

நாம் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழும்பொழுது நாம் விரும்பும் யாவும் நமக்கு கிடைக்கும்.நம்முடைய உள்ளத்திலும்,எண்ணத்திலும் கள்ளம்,கபடம்,இல்லாமல் தூய்மையை கடைப்பிடித்தால் அவரது ஆட்சியில் பங்கு பெறுவோம்.அவரின் வருகையில் அவரோடு செல்வோம்.சோம்பேறிகளுக்கு அறிவை புகட்டி,மனத்தளர்ச்சி உற்றவர்களுக்கு ஊக்கமூட்டி வலுவற்றோர்க்கு உதவி,எல்லோருடும் பொறுமையாய் இருந்து,தீமைக்கு பதில் தீமை செய்யாமல் எல்லோருக்கும் நன்மையே செய்வோம்.மகிழ்ச்சியாய் இருந்து இடைவிடாது இறைவனை வேண்டி எல்லா சூழ்நிலையிலும் நன்றியோடு இருந்து தூய ஆவியின் செயல்பாட்டை தரித்துக்கொண்டால் ஆண்டவருக்கு உகந்தவர்களாய் மாறி அவரது ஆட்சியில் பங்கு பெறுவோமாக!!!

ஜெபம்

எங்கள் அன்பின் இரட்சகரே!இயேசுவே எங்களுக்காக மரித்தவரே, உமக்கு நன்றிபலிகளை எறேடுக்கிறோம்.உமது ஆட்சியில் பங்கு பெரும் தகுதியை நாங்கள் பெற்றுக்கொள்ள உதவி செய்யும். அனுதினமும் எங்களுக்கு போதித்து நாங்கள் நடக்க வேண்டிய பாதையில் நடத்திச் செல்லும்.அதிகாலையில் உம்மை தேடவும்,உம்மை கண்டுக்கொள்ளவும் உமது சித்தம் அறிந்து அதையெல்லாம் செயல்படுத்தவும் கற்றுத்தாரும்,எங்கள் குற்றம்,குறைகளை மன்னித்து உம்மிடத்தில் அடைக்கலமாய் சேர்த்துக்கொள்ளும். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வேண்டுகிறோம் எங்கள் இதய தகப்பனே!ஆமென்!!அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.