ஏ அப்பா என்னா திட்டு…
மத்தேயு 23:23-26
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துதுகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
அன்புமிக்கவர்களே! இன்றைய நற்செய்தியைப் படிக்கும் போது நமக்கு இரண்டு விதமான உணா்வுகள் வெளிப்படுகின்றன. (1) இயேசு ரொம்ப திட்டுவதைப் பார்க்கும் போது ரொம்ப “ஷாக்கா” இருக்கிறது (2)மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் அடிக்கடி இயேசுவை குற்றம் சாட்டினர். பல தொல்லைகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தனர். இயேசு சரியாக நேரத்தைப் பயன்படுத்துகிறார். இது அவர்களுக்கு தேவைதான் என்ற உணர்வும் ஏற்படுகிறது.
இயேசு ஏன் திட்டுகிறார்?. அன்பு, இரக்கம் மிகுந்த கடவுள் ஏன் இப்படி திட்டுகிறார் என்பதை நாம் பார்க்கும்போது அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. நாம் இரண்டு காரணங்களை மிகவும் அழுத்தமாக சொல்ல முடியும்.
1. கடைப்பிடிக்கவில்லை…. திட்டு வாங்கினார்கள்
கடவுளின் முக்கியமான போதனை நீதி, இரக்கம், பரிவு இவற்றைக் கடைப்பிடித்து கடவுளை நேசிப்பது போல அடுத்தவரையும் அன்பு செய்ய வேண்டும் என்பது. ஆனால் இவர்கள் இதையெல்லாம் கடைப்பிடிக்காமல் கடவுளுக்கு புதினா, சோம்பு, சீரகம் இவற்றில் பத்தில் ஒரு பங்கைப் படைப்பதிலே கவனமாய் இருந்தார்கள். கவனாய் கடைப்பிடிக்க வேண்டிய கடவுளின் போதனைகளை காற்றிலே விட்டுவிட்டார்கள். ஆகவே இயேசு வெளிடேக்காரர்களே உங்களுக்கு கேடு என திட்டுகிறார்.
2. தூய்மையாக்கவில்லை… திட்டு வாங்கினார்கள்
கடவுளின் போதனை உட்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்பது. ஆனால் இவர்கள் அதற்கு எதிராக வெளிப்புறத்தை தூய்மையாக்கினார்கள். உட்புறத்தை கொள்ளைப் பொருள்களாலும் தன்னல விருப்புகளாலும் நிரப்பினார்கள். ஆகவே இயேசுவுக்கு கோபம் கொப்பளிக்கிறது. நன்றாக திட்டு வாங்குகிறார்கள்.
அன்புமிக்கவர்களே! நம்மை பரிசோதித்து பார்க்கும் நல்ல நாள் இது. நம்முடைய செயல்பாடுகளை பார்க்கும் போது இயேசு திட்டுவாரா? அகமகிழ்வாரா? நாமும் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் போல் செயல்பட்டால் மாற்றம் பெறும் நாள் இது. மாறுவோம். மகிழ்ச்சியை மனதில் என்றும் அழியாமல் விதைப்போம்.
மனதில் கேட்க…
1. கடவுளை ஆர்வமாக வழிபடுகிற நான், அவர் சொல்வதை மிகவும் ஆசையாக கடைப்பிடிக்கிறேனா?
2. வெளிப்புறத்தை சுத்தாமாக வைக்கும் நான் அதை விட மிகவும் சுத்தமாக உட்புறத்தை வைக்கலாமே?
மனதில் பதிக்க…
உங்கள் விண்ணகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள் (மத் 5:48)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா