எருசலேம் குமாரத்தியே கேள்
நாம் வேண்டுவதற்கு முன்னே மறுமொழி தரவும்,நாம் பேசி முடிப்பதற்கு முன்னே பதில் அளிக்கவும் கடவுள் எப்பொழுதும் நம்முடைய நினைவாக நிழலாக இருக்கிறார்.நம்மை ஒரு திராட்சை தோட்டமாக உருவாக்கி நல்ல பழங்களை நாம் கொடுக்கும்படி அவர் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்.நற்கனிகளை கொடுக்கிறோமா?என்று ஒவ்வொருவரும் இந்த நாளில் சிந்தித்து செயல்பட வேண்டுமாக விரும்புகிறார்.ஏனெனில் மலைகளை உருவாக்கியவர் அவரே; தோற்றுவிப்பவர் அவரே; எண்ணத்தை மனிதனுக்கு வெளிப்படுதுபவரும் அவரே;காலைப்பொழுதை காரிருள் ஆகச் செய்பவரும் அவரே;இப்பேற்பட்ட ஆண்டவருக்கு நாம் நல்ல பழங்களை கொடுக்கிறோமா?
ஒருநாள் இயேசு காலையில் நகரத்திற்கு திரும்பி வந்தபொழுது அவருக்கு பசி உண்டாயிற்று.வழியோரத்தில் ஒரு அத்தி மரத்தை பார்த்து அதன் அருகில் சென்று அதில் ஏதாவது கனி இருக்கும்,பறித்து சாப்பிடடலாம் என்று நினைத்தார்.ஆனால் அந்த மரத்தில் ஒன்றும் இல்லாததால் அந்த மரத்தைப் பார்த்து இனி நீ கனி கொடுக்கவே மாட்டாய் என்று சொன்னார்.உடனே அந்த அத்திமரம் பட்டுப்போயிற்று.சீடர்கள் யாவரும் ஆச்சரியப்பட்டு இந்த மரம் எப்படி உடனே பட்டுப்போயிற்று?என்று கேட்டார்கள்.அதற்கு இயேசு மறுமொழியாக நீங்கள் சந்தேகப்படாமல் நம்பிக்கையோடு கேட்டால் நான் செய்தது போல நீங்களும் செய்வீர்கள்.உங்களாலும் செய்ய முடியும் என்று நமக்கும் அதிகாரத்தை கொடுத்திருக்கிறார்.
ஆகையால் நாமும் ஒவ்வொருநாளும் நம்முடைய நம்பிக்கையில் அதிகதிகமாக வளர்ந்து எல்லாவற்றிலும் கனி தரும் ஒரு நல்ல மரமாக மனிதர்களாக மாறுவோம்.இதுவே ஆண்டவர் நம்மீது வைத்துள்ள விருப்பம்.
அல்லது ஆண்டவர் நம்மைப்பார்த்து புலம்பும்படி செய்யப்போகிறோமா? எருசலமே,எருசலமே,இறைவாக்கினரை கொல்லும் நகரமே உன்னிடம் அனுப்பியவர்களை கல்லால் எறிகிறாயே,கோழி தன் குஞ்சுகளை தனது இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பது போல நானும் உங்களை சேர்த்து அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன்.ஆனால் உங்களுக்கு விருப்பம் இல்லாமல் போய்விட்டதே என்று சொல்லும் சொல்லுக்கு ஆளாகப் போகிறோமா?இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் நல்ல கனி தரும் மரமாக மாறுவோம்.ஆண்டவரின் மன விருப்பத்தை நிறைவேற்றுவோம்.ஒவ்வொருநாளும் அவருக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்து அவரின் நாமத்துக்கே மகிமைச் சேர்ப்போம்.
அன்பின் இறைவா!!
நீர் எங்களுக்கு காட்டும் பாதையில் நடந்து ஒவ்வொருநாளும் நீர் விரும்பும் வாழ்க்கையை வாழ்ந்து உமது திருநாமத்துக்கே மகிமை சேர்க்க உதவி செய்தருளும்,என்றென்றும் உமது இறக்கைக்குள் பாதுகாப்பாக இருக்க நீரே எங்களுக்கு போதித்து வழிநடத்தி காத்து ஆசீர்வதிப்பீராக!!என்ன துன்பங்கள் வந்தாலும் எங்கள் நம்பிக்கையில் மனம் தளர்ந்து போகாதப்படிக்கு காத்தருளும்.மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே!!
ஆமென்! அல்லேலூயா!!