எதை கேட்டாலும் செய்வேன்
நம் வாழ்க்கையில் மிகப் பெரிய ஆசீர்வாதம் நாம் கேட்டவை அனைத்ததையும் பெற்றுக்கொண்டோம் என்பதுதான். “நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன்” (யோவான் 14:13, 14:14) இரண்டு முறை இயேசு இதைச் சொல்லுகிறார்.அவ்வாரே நம்பிக்கையோடு கேட்ட யாவரும், கேட்ட அனைத்தையும் பெற்றுள்ளனர் என்பதையும் விவிலியத்தின் பல சான்றுகளில் அறிய வருகிறோம்.
இவ்வாறு கேட்ட அனைத்தையும் நாம் பெற வேண்டுமானால், அந்த ஆளைப்பற்றிய அனுபவம், அறிவு இருக்கவேண்டும். இந்த ஆளிடம் இதைக்கேட்டால் கிடைக்கும் என்ற அனுபவமும் அறிவும் அவசியம் தேவை.இயேசுவைப்பற்றிய அனுபவமும் அறிவும் நாம் கேட்ட அனைத்தையும் நமக்குத் தர வல்லது. இதைத்தான் கடவுள் நம்பிக்கை அல்லது விசுவாசம் என்று சொல்லலாம்.
இன்று வரையிலும் அந்த அன்பு தெய்வம் நமக்குச் செய்துவருகிற நன்மைகளை நாம் ஆழ்ந்து சிந்தித்தாலே இந்த இறை அனுபவத்தைப் பெற்றுவிடுவோம்.பெரும்பாலும் கடவுள் நமக்குச் செய்து வரும் நன்மைகளை நாம் சிந்திப்பதே இல்லை. ஏதோ நமது திறமையால் பணத்தால் நாம் சாதித்ததாக நினைத்துவிடுகிறோம். கடவுளை மறந்து விடுகிறோம். இது கடவுளிடம் நாம் கேட்காததற்குச் சமம். எனவே அடுத்த முறை நாம் நினைப்பது நடப்பதில்லை. கேட்பது கிடைப்பதில்லை. ஆகவே, இந்த நம்பிக்கையோடு கேட்ப்போம். கேட்டவை யாவும் கிடைக்கும்.இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.
~ அருட்திரு ஜோசப் லியோன்