உங்களிடத்தில் கடவுளைப் பார்க்கலாமா?
மத்தேயு 11:25-27
கடவுளின் சாயலிலும் உருவிலும் படைக்கப்பட்ட மனிதர்கள் கடவுள் போன்று செயல்படுவதில்லை. அவர்களுக்குள்ளே இருக்கும் கடவுளை வெளியே பிரதிபலிப்பதில்லை. மனிதர்கள் தங்களுக்குள்ளே கொண்டிருக்கும் அன்பில்லாமை, அடக்கமின்மை, அதிகாரமின்மை இவையனைத்தும் கடவுளின் பண்புகளை மறைக்கின்றன. ஆகவே மனிதன் கடவுளை வெளியே கொண்டு வர முடியவில்லை.
கடவுளை வெளியே கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்பதற்கான நம்முடைய ஆர்வமான கேள்விக்கு விடை கொடுக்கிறது நற்செய்தி வாசகம். ஞானிகள் கடவுளை வெளியே கொண்டு வர முடியாது. அறிஞர்கள் கடவுளை வெளியே கொண்டு வர முடியாது. அவர்களுக்கு கடவுளுடைய வெளிப்படுத்துதல் இல்லை. காரணம் தடைக்கற்காளாக அவர்களுடைய ஆணவம், அதிகாரம், அகங்காரம் இருக்கின்றன. கடவுள் எளிய உள்ளம் கொண்டவர்கள் உள்ளத்தில் குடிகொள்கிறார். குழந்தை உள்ளம் கொண்டவர்களோடு தங்குகிறார். அவர்கள்தான் கடவுளை வெளியே கொண்டு வருகிறார்கள். காரணம் அவர்கள் அவசியமற்றவைகளிலே சிக்குவதில்லை. ஆகவே அவர்கள் அழகாக ஆண்டவரை வெளியே கொண்டு வருகிறார்கள்.
மனதில் கேட்க…
• நான் கடவுளை வெளியே கொண்டு வர தடைக்கற்கள் என்னென்ன?
• என்னிடத்தில் கடவுளை கொண்டு வர முயற்சி எடுப்பேனா?
மனதில் பதிக்க…
“உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில், விண்ணரசில் நுழையமாட்டீர்கள்(மத்தேயு 18:3)
– அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா