இயேசுவே கடவுள்:வேறு எவரும் இல்லை”என்று உலகின் எல்லா மக்களும் அறிவார்களாக!! 1 அரசர்கள் 8 : 60
தொடக்கத்தில் வாக்கு இருந்தது:அவ்வாக்கு கடவுளோடு இருந்தது: அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது.யோவான் 1 : 1.அந்த வாக்கே இயேசுவாக மனுஷர் சாயல் எடுத்து இவ்வுலகிற்கு வந்து இருளில் இருக்கும் எல்லா மக்களும் வெளிச்சத்தைக் காணும்படிக்கு பரலோகத்தை விட்டு இந்த பூமிக்கு வந்தார். இறைவனின் உள்ளத்தை வெளிப்படுத்த, இறைவன் திருவுளத்தை எடுத்துரைக்கவும், அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர்கள் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளிக்கவும் வந்தார்.
கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை:அந்த கடவுளின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள் தன்மை கொண்டவருமான ஒரே மகனான இயேசுவே கடவுளை வெளிப்படுத்தினார். இந்த கடவுளால் அன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால், நாம் மீட்பு பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை. தி.பணிகள் 4 : 12. இயேசுவே வழியும், உண்மையும், வாழ்வும் நானே, என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை என்று கூருகிறார்.
திராட்சைக் கொ டியில் கிளைகள் ஒட்டிக்கொண்டு இருப்பதுப்போல் நாமும் கிளைகளாய், அந்த கொடியோடு ஒட்டிக்கொண்டு இருந்தால் மிகுந்த கனிகளை கொடுக்கிரவர்களாய் இருப்போம். விண்ணையும், மண்ணையும்,படைத்த ஆண்டவர் ஒருவரே! அவருடைய கோபம் பற்றிக்கொள்ளும் முன்னே அச்சத்தோடு அவரை வழிப்பட்டு அவர் முன் அகமகிழுங்கள். ஏனெனில் அவர் சினங்கொள்ளாதபடியும் வழியிலே அழியாதபடியும் அவரது காலடியை முத்தமிடுங்கள்: இல்லையேல், அவரது சினம் விரைவில் பற்றியெரியும். அவரிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் பேறுபெற்றோர் என்று திருப்பாடல்கள் 2 : 12 ல் வாசிக்கிறோம்.
அன்புள்ள இறைவா!
உம்மை நோக்கி மன்றாடுகிறோம். எங்களுக்கு செவிசாய்த்து பதிலளியும்: எங்கள் உயிரை காத்தருளும். உம்மை நோக்கி மன்றாடுகிறோம். மக்களினத்தார் அனைவரையும் நீரே படைத்தவர். நீரே மாட்சி மிக்கவர் வியத்தகு செயல்களை செய்பவர்நீரே. நீர் ஒருவரே கடவுள். எங்கள் முழு உள்ளத்தோடு உம்மையே புகழ்வோம். உலகில் உள்ள அனைத்து மக்களும் நீர் ஒருவரே அருள் மிகுந்தவர்,என்றும் அன்பும், பேரன்பும், உண்மையும் ஆற்றலும், உள்ளவர் என்று அறிந்து உம்மையே ஏற்றுக்கொண்டு பணிந்துக்கொள்ள உதவி செய்யும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இணையற்ற பெயரால் வேண்டிக்கொள்கிறோம் எங்கள் ஜீவனுள்ள அன்பின் பிதாவே!ஆமென்!அல்லேலூயா!!