ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி தந்தருள்வார்
விண்ணகக் கடவுளாகிய ஆண்டவர் பெரியவரும் அஞ்சுதற்கு உரியவரும் ஆனவர்.அவரிடம் அன்புக்காட்டி அவருடைய கட்டளைளைக் கடைப்பிடித்தால் நம்மேல் அவரது அளவில்லா இரக்கங்களை பொழிந்தருள்வார்.அவரின் மக்களாகிய நாம் இரவும்,பகலும் அவரையே நோக்கிப்பார்த்தால் எல்லா ஆபத்துக்களிலும் இருந்து நித்தமும் காத்திடுவார்.அவருடைய தெய்வீக சமாதானத்தினால் நிறைத்திடுவார்.இதைத்தான் தாவீது நன்கு உணர்ந்து அவரது சட்டத்தை இரவும்,பகலும் சிந்திப்பவர் மகிழ்ச்சி கொள்வார்கள் என்று திருப்பாடல் 1 : 2 ல் எழுதியிருக்கிறார்.
இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அடிமைப்பட்டு இருந்த பொழுது மோசேயை அங்கு அனுப்பி தமது மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு இஸ்ரயேல் நாட்டுக்கு அழைத்து வந்து அவர்கள் பயிருடதாததும்,அவர்கள் கட்டாதும் ஆன வீட்டிலே குடியிருக்கச் செய்து அவர்களை கண்ணின் மணியைப்போல் காத்து அவர்களுக்கு அமைதியை தந்தருளினார்.கானான் நாட்டில் குடியிருந்த அவர்கள் எத்தனை தடவையோ பாவம் செய்து அவரை விட்டு பின்வாங்கிப் போனாலும் அவர் அவர்களோடு கூடவே இருந்து ஒரு தீங்கும் தொடாதபடிக்கு காத்தருளினார்.
அதே ஆண்டவர் இன்றும் நம் மத்தியில் இருக்கிறார். அவரை நோக்கி விண்ணப்பம் செய்யும் ஒவ்வொருவருக்கும் தமது கிருபையை இன்றும் அளித்துக்கொண்டுதான் இருக்கிறார்.அவரிடத்தில் இருந்து நிச்சயம் நமக்கு உதவி வரும்.நம்மை காக்கிற கடவுள் தூங்குவதும் இல்லை,கண்ணயர்வதும் இல்லை.நமது வலப்பக்கத்தில் நமக்கு நிழலாய் எப்போதும் நம் அருகிலேயே இருக்கிறார்.அவர் நம்முடைய தேவைகள் யாவையும் நிறைவேற்றி அளவில்லாத அமைதியை தந்து ஒவ்வொருநாளும் நம்மை வழிநடத்தி வருவதை நினைத்து அவருக்கு என்றென்றும் நன்றியை ஏறெடுப்போம்.
அன்பின் தகப்பனே!!
உம்மை போற்றுகிறோம்,துதிக்கிறோம்.நாங்கள் அறியாமல் தெரியாமல் செய்யும் எல்லா தவறுகளையும் நீர் தாமே பொறுத்தருளும்.எங்களுக்காக நீர் உமது தந்தையிடம் மன்றாடிக் கொண்டு இருக்கிறீர். அதற்காக உமக்கு கோடி நன்றிபலிகளை எறெடுக்கிறோம்.இந்த பூமியில் உமது சமாதானத்தை நிலைக்கச் செய்யும்.துதி,கனம்,மகிமை யாவும் உம் ஒருவருக்கே செலுத்துகிறோம் எங்கள் நல்ல தந்தையே!!
ஆமென்! அல்லேலூயா!!!