ஆச்சரியம் ஆனா அதிசயம்
லூக்கா 5:1-11
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
சிறுவயதிலிருந்தே மறைக்கல்வி வகுப்புகளில் அழுத்தம் திருத்தமாக நமக்கு சொல்லித் தரப்படுகிறது. இயேசுவோடு நாம் இருக்கும் போது நம் வாழ்க்கை மாறும். மகிழ்ச்சி மனங்களி்ல் மத்தளமிடும். மங்களகரமான வருங்காலம் உருவாகும். ஆனால் நாம் இயேசுவோடு இருப்பதில்லை. இவைகளை அனுமதிப்பதில்லை. இயேசுவோடு இல்லாமல் அவதிப்படும் நமக்கு இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவோடு இருப்பதற்கான அந்த அழைப்பை திரும்ப நினைவூட்டுவதாக அமைகிறது.
இயேசுவோடு நாம் இருக்கும் போது பலவிதமான நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. அவற்றில் இரண்டு முக்கியமானவைகளை நாம் அவசியம் பார்த்தே ஆக வேண்டும்.
1. ஆச்சரியம்
நம்முடைய பண்புகளிலே ஆச்சரியம் ஏற்படும். பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பதற்கேற்ப நாம் அவரோடு சேர்ந்த பிறகு மணக்க ஆரம்பிப்போம். நம் பண்புகள் பண்படுத்தப்படும். பேச்சில் புனிதம் கலந்திருக்கும். ஆகவே ஆச்சரியப்படும் மனிதர்களாக நாம் மாறுவோம்.
2. அதிசயம்
நம் வழியாக கடவுள் பல அதிசயங்களை அரங்கேற்றுவார். பல வல்ல செயல்களை செய்யும் வல்லமையை வழங்குவார். மனிதர்கள் பலர் நம் வாழ்க்கை, போதனை வழியாக கடவுளிடம் வந்து சேருவார்கள். நாம் அதற்கான கருவியாக மாறுவோம்.
மனதில் கேட்க…
1. இயேசுவின் சீடனா நான்? இது பிடிக்கிறதா? இல்லையா?
2. ஆச்சரியமாக, அதிசயமாக நான் மாறி காட்டலாமே?
மனதில் பதிக்க…
அஞ்சாதே, இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய் (மத் 5:10)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா