அறிவுள்ள செயல்பாடு
“நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள்” இயேசுவின் இந்த அறிவுரை அதிர்ச்சியை தருகிறதா? உண்மை. ஆனாலும் அவர் சொல்ல வந்த கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நேர்மையற்ற செல்வம் என இயேசு குறிப்பிடுவது இவ்வுலக செல்வங்களையே. இயேசுவின் பார்வையில்,விண்ணகச் செல்வத்தோடு ஒப்பிடும்போது இவை நேர்மையற்ற செல்வம். இருப்பினும் மனித கண்ணோட்டத்தில், நேர்மையான வழிகளில் சம்பாதித்தவை அனைத்தும் நேர்மையான செல்வம்தான். இந்த செல்வத்தைக்கொண்டு நண்பர்களைத் தேடிக்கொள்ள வேண்டும். விண்ணக செல்வத்தைத் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நேர்மையான செல்வம் என்பது விண்ணகச் செல்வம் ஒனறே. “கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம்”; (பிலிப்பியர் 3 :8). “எகிப்தின் செல்வங்களைவிட, “மெசியாவின்” பொருட்டு இகழ்ச்சியுறுவதே மேலான செல்வம்”(எபிரேயர் 11 :26)
இவ்வுலகில் கடவுள் நமக்குத் தந்த செல்வத்தைப் பயன்படுத்தி எவ்வாறு நண்பர்களை தேடிக்கொள்வது விண்ணக செல்வத்தைச் சேர்த்துக்கொள்வது என்பதற்கான வழிகளை ஆராய்வோம். அதைச் செயல்படுத்துவோம். அப்பொழுது நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நாம் நம்பத்தகுந்தவராய் இருப்போம்.நம்மை நம்பி உண்மைச் செல்வத்தை நம்மிடம் ஒப்படைப்பார்.
~அருட்திரு ஜோசப் லீயோன்