அக்டோபர் மாத அதிர்ச்சி…
லூக்கா 12:49-53
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
மண்ணுலகில் தீமூட்டவே வந்தேன் என்ற வார்த்தையோடு இன்றைய நற்செய்தி வாசகம் ஆரம்பமாகிறது். ஆரம்பமே அதிரடி அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த வார்த்தைதான் அக்டோபர் மாத்திற்கான அதிரடி அதிர்ச்சியாகும். தீமூட்ட இந்த வார்த்தை எதிர்மறையானது அல்ல. மாறாக நேர்மறையானதும் நம்மை நேராக்க கூடியதும் இந்த வார்த்தைதான். எப்படி? இந்த நெருப்பு அல்லது தீ என்ற வார்த்தை இயேசுவைக் குறிக்கிறது. இயேசு என்ற நெருப்பிடம் நாம் நெருங்கி வரும்போது பல வல்ல செயல்கள் நடக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமான இரண்டு.
1. எரிக்கிறது
நெருப்பின் மிக முக்கியமான பணி எரி்ப்பது. அசுத்தத்தை எரித்து அழகை அளிப்பது. இயேசு என்ற நெருப்பு நமக்குள் இருக்கும் அசுத்தங்களை, அழுக்குகளை எரிக்கிறது. நம் குறைகளை, பாவங்களை, கறைகளை தீமூட்டி இயேசு எரிக்கிறார். எனக்குள்ளே ஒரு சுத்திகரிப்பு நிகழ்கிறது.
2. எடுக்கிறது
இயேசுவின் தீ நாம் சமாதானத்தோடு வாழ்வதற்கு எவையெல்லாம் தடையாக இருக்கிறதோ அதை கவனத்தோடு கண்டுபிடித்து சாம்பலாக்கிறது. நமக்கு நிரந்தரமான அமைதியை அளிக்கிறது. மேலும் இந்த தீ எச்சூழ்நிலையிலும் நாம் அமைதிக்கு இறையூறாக இல்லாமல் இருப்பதற்கான வழிகளையும் கற்றுத்தருகிறது.
மனதில் கேட்க…
1. இயேசு என்ற நெருப்பு எனக்கு அதிர்ச்சியா? வளர்ச்சியா?
2. இயேசு என்ற நெருப்புக்குள் நான் வந்தால் சுத்தமாவேன், சுகமாவேன் தெரியுமா?
மனதில் பதிக்க
மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்(லூக் 12:49)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா