Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

சாமுவேல் - முதல் நூல்

அதிகாரம் 5

பெலிஸ்தியரிடம் உடன்படிக்கைப் பேழை
1 பெலிஸ்தியர் கடவுளின் பேழையைக் கைப்பற்றி, அதை எபனேசரிலிருந்து அஸ்தோதிற்குக் கொண்டு சென்றனர். 2 பெலிஸ்தியர் கடவுளின் பேழையைத் தாகோன் கோவிலுக்குத் தூக்கிக் கொண்டு வந்து, தாகோன் சிலை அருகில் வைத்தனர். 3 அஸ்தோதின் மக்கள் மறுநாள் அதிகாலையில் விழித்தெழுந்தபோது, தாகோன் சிலை ஆண்டவரின் பேழைக்கு முன் முகம் குப்புறத் தரையில் விழுந்து கிடந்ததைக் கண்டனர். அவர்கள் அதை எடுத்து அதன் இடத்தில் மீண்டும் நிறுத்தினார்கள். 4 அவர்கள் மறுநாள் அதிகாலையில் விழித்தெழுந்த போது தாகோன், சிலை ஆண்டவரின் பேழைக்கு முன் முகம் குப்புறத் தரையில் விழுந்து கிடந்ததைக் கண்டனர். ஆனால் அதன் தலையும், இருகைகளும் துண்டிக்கப்பட்டு, வாயிற்படியில் கிடந்தன. அதன் உடல் பகுதி மட்டும் எஞ்சியிருந்தது. 5 ஆகவே தான் தாகோனின் அர்ச்சகர்களும் தாகோனின் கோவிலுக்குள் செல்லும் அனைவரும் அஸ்தோதிலிருக்கும், தாகோனின் வாயிற்படியை இந்நாள்வரை மிதிப்பதில்லை. 6 அஸ்தோதின் மக்களை அழிக்கும் படியாக ஆண்டவரின் கை அவர்களை வன்மையாகத் தாக்கியது. அஸ்தோது வாழ் மக்களையும் அதன் எல்லைக்கு உட்பட்டவர்களையும் அவர் மூலக் கட்டிகளல் வாட்டி வைத்தனர். 7 அஸ்தோதின் மக்கள் இவ்வாறு நிகழ்ந்ததைக் கண்டபோது, இஸ்ரயேலின் கடவுளது பேழை நம்மிடையே இருக்கலாகாது. ஏனெனில் அவரது கை நம்மையும் நம் தெய்வம் தாகோனையும் வன்மையாகத் தாக்கியுள்ளது என்று பேசிக் கொண்டனர். 8 ஆகவே அவர்கள் ஆளனுப்பி பெலிஸ்தியத் தலைவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களிடம் இஸ்ரயேலரின் கடவுளது பேழையை நாம் என்ன செய்வோம்? என்று கேட்டனர். அவர்கள், இஸ்ரயேலரின் கடவுளது பேழையைக் காத்து நகருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று பதிலுரைத்தனர். அவ்வாறே இஸ்ரயேலரின் கடவுளது பேழையை எடுத்துச் சென்றனர்.9 அதை அங்கு எடுத்துச் சென்ற பின், ஆண்டவரின் கை அந்நகரை வன்மையாகத் தாக்கி, மாபெரும் அழிவை ஏற்படுத்தியது. அவர் அந்நகர் மக்களை, சிறியோர் முதல் பெரியோர் வரை, மூலக் கட்டிகளால் வதைத்தார். 10 அவர்கள் கடவுளின் பேழையை எக்ரோனுக்கு அனுப்பினார்கள். கடவுளின் பேழை எக்ரோனுக்கு வரவே, எக்ரோனியர், எங்களையும் எங்கள் மக்களையும் அழிக்கவே இஸ்ரயேலரின் கடவுளது பேழையைக் கொண்டு வந்து விட்டார்கள் என்று கத்தினார்கள். 11 எனவே அவர்கள் ஆள் அனுப்பி பெலிஸ்திய தலைவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களிடம், இஸ்ரயேலின் கடவுளது பேழையைத் திருப்பி அதன் இடத்திற்கே அனுப்பி விடுங்கள். எங்களையும் எங்கள் மக்களையும் அவர் கொல்லா திருக்கட்டும் என்று கேட்டுக் கொண்டனர். கடவுளின் கை அவர்களை வன்மையாகத் தாக்கியதால், அந்நகர் எங்கும் மக்கள் இறந்தார்கள்.12 இறவாமல் இருந்த மக்கள் மூலக் கட்டிகளால் வதைக்கப்பட்டார்கள். அந்நகரின் கூக்குரல்கள் வான் மட்டும் எழும்பியது.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!