Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

எசாயா

அதிகாரம் 39

பாபிலோனின் தூதர் (2 அர 20:12-19)
1 அக்காலத்தில், பாபிலோன் மன்னன் பலாதானின் மகன் மெரோதாக்கு பலாதான், எசேக்கியா நோய்வாய்ப்பட்டதையும் அவர் குணமடைந்ததையும் கேள்வியுற்று அவரிடம் மடலையும் அன்பளிப்பையும் அனுப்பி வைத்தான்.2 இதுபற்றி மகிழ்ந்த எசேக்கியா தூதர்க்குத் தம் கருவூல அறை, நறுமணப் பொருள்கள், பரிமளத்தைலம், பொன், வெள்ளி ஆகியவற்றையும் தம் படைக்கலன் இருந்த அறை முழுவதையும், தம் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்ட அனைத்தையும் காண்பித்தார். எசேக்கியா தம் அரண்மனையிலோ தம் ஆட்சி எல்லைக்குள்ளோ 3 அப்போது, எசாயா இறைவாக்கினர் எசேக்கியா அரசரிடம் வந்து, அந்த ஆள்கள் என்ன சொன்னார்கள்? எங்கிருந்து உம்மிடம் வந்தார்கள்? என்று வினவ, அவர்கள் தொலை நாடான பாபிலோனிலிருந்து என்னிடம் வந்தார்கள் என்றார்.4 உம் அரண்மனையில் என்ன பார்த்தார்கள்? என்று அவர் வினவ, என் அரண்மனையில் உள்ள அனைத்தையும் பார்த்தார்கள், நான் அவர்களுக்குக் காட்டாத பொருள் எதுவும் என் சேமிப்புக் கிடங்கில் இல்லை என்றார் எசேக்கியா.5 அப்போது எசாயா எசேக்கியாவிடம், படைகளின் ஆண்டவரின் வாக்கைக் கேளும்:6 இதோ, நாள்கள் வருகின்றன, அப்போது உம் அரண்மனையில் இருப்பவையும் இந்நாள்வரை உம் மூதாதையர் சேமித்து வைத்திருப்பவையும் பாபிலோனுக்குக் கொண்டு போகப்படும்: எதுவும் விடப்படாது, என்கிறார் ஆண்டவர்.7 உமக்குப் பிறக்கும் புதல்வர் சிலர் கைதுசெய்யப்படுவர்: பாபிலோன் மன்னர் அரண்மனையில் அவர்கள் அண்ணகராய் இருப்பர் என்றார்.8 தம் ஆட்சிக்காலத்தில் அமைதியும் பாதுகாப்பும் இருக்கும் என்றுணர்ந்த எசேக்கியா எசாயாவை நோக்கி, நீர்கூறிய ஆண்டவரின் வாக்கு நல்லதே என்றார்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!