Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்)

அதிகாரம் 133

சகோதர அன்பின் சிறப்பு
(சீயோன் மலைத் திருப்பயணப் பாடல்; தாவீதுக்கு உரியது)
1 சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது!2 அது ஆரோனின் தலையினிலே ஊற்றப்பெற்ற நறுமணத்தைலம் அவருடைய தாடியினின்று வழிந்தோடி அவருடைய அங்கியின் விளிம்பை நனைப்பதற்கு ஒப்பாகும்.3 அது எர்மோனின் மலைப்பனி சீயோனின் மலைகள்மேல் இறங்குவதற்கு ஒப்பாகும்: ஏனெனில், அங்கிருந்தே என்றுமுள வாழ்வென்னும் ஆசிதனை ஆண்டவர் பொழிந்தருள்வார்.


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!