Chapter: Verses:
Start  End 
 
 
திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

சாமுவேல் - இரண்டாம் நூல்

அதிகாரம் 22

தாவீதின் வெற்றிப் பாடல் (திபா 18)
1 ஆண்டவர் தாவீதை அவருடைய எதிரிகள் கையினின்றும் சவுலின் கையினின்றும் விடுவித்தபோது அவர்கள் ஆண்டவருக்கு பண்ணிசைத்துப் பாடியது:2 ஆண்டவர் என் காப்பாறை: என் கோட்டை: என் மீட்பர்:3 கடவுள்: நான் புகலிடம் தேடும் மலை அவரே: என் கேடயம்: எனக்கு மீட்பளிக்கும் வல்லமை: என் அரண்: என் தஞ்சம்: என் மீட்பர்: கொடுமையினின்று என்னை விடுவிப்பவரும் அவரே.4 போற்றர்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன். என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன்.5 ஏனெனில், சாவின் அலைகள் என்னை சூழ்ந்துக் கொண்டன: அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.6 பாதளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின: சாவின் கண்ணிகள் என்னை சிக்க வைத்தன.7 நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்: என் கடவுளை நோக்கி கதறினேன். தமது கோவிலினின்று அவர் என் குரலைக் கேட்டார்: என் கதறல் அவர் செவிக்கு எட்டியது.8 அப்பொழுது, மண்ணுலகம் அசைந்து அதிர்ந்தது:9 அவரது நாசியினின்று புகை கிளம்புற்று: அவரது வாயினின்று எரித்தழிக்கும் தீ மூண்டது: அவரிடமிருந்து நெருப்பு கனல் வெளிப்பட்டது.10 வானை வாழ்த்தி அவர் கீழிறங்கினார்: கார் முகில் அவர் காலடியில் இருந்தது.11 கெரபுமீது அவர் ஏறிப் பறந்து வந்தார்: காற்றை இறக்கைகளாகக் கொண்டு விரைந்து வந்தார்.12 காரிருளை அவர் மூடுதிரை ஆக்கிக் கொண்டார்: நீர் கொண்ட முகிலைக் கூடாரமாக்கிக் கொண்டார்.13 அவர் தம் திருமுன்னின் பேரொளியினின்று நெருப்புக் கனல் தெரிந்தது.14 ஆண்டவர் வானங்களில் இடியென முழங்கினார்: உன்னதர் தம் குரலை அதிரச் செய்தார்.15 தம் அம்புகளை எய்து அவர் அவர்களை சிதறடித்தார்: மின்னல்களால் அவர்களை கலங்கடித்தார்.16 ஆண்டவரின் கடிந்துரையாலும் அவரது மூச்சுக் காற்றின் வலிமையாலும் கடவுளது அடிப்பரப்பு தென்பட்டது: நிலவுலகின் அடித்தளம் காணப்பட்டது.17 உயரத்தினின்று அவர் என்னை எட்டிப்பிடித்துக்கொண்டார்: வெள்ளைப் பெருக்கினின்று அவர் என்னை காப்பாற்றினார்.18 வலிமைமிகு எதிரிகளிடமிருந்து என்னை விடுவித்தார். என்னை விட வலிமைமிகு பகைவரிடமிருந்து என்னை பாதுகாத்தார்.19 எனக்கு இடுக்கண் வந்த நாளில் அவர்கள் என்னை எதிர்த்தார்கள்: ஆண்வரோ எனக்கு ஊண்று கோலாய் இருந்தார்.20 நெருக்கடியற்ற இடத்திற்கு அவர் என்னைக் கொணர்ந்தார்: நான் அவர் மனதிற்கு உகந்தவனாய் இருந்ததால் அவர் என்னைவிடுவித்தார்.21 ஆண்டவர் என் நேர்மைக்கு உரிய பயனை எனக்களித்தார் என் மாசற்ற செயலுக்கு ஏற்பக் கைம்மாறு செய்தார்.22 ஏனெனில் நான் ஆண்டவர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்தேன்: பொல்லாங்கு செய்து என் கடவுளை விட்டு அகலவில்லை.23 அவர் தம் நீதி நெறிமுறைகளை எல்லாம் என் கண்முன் வைத்திருந்தேன்: அவர்தம் விதிமுறைகளை நான் ஒதுக்கித் தள்ளவில்லை.24 அவர் முன்னிலையில் நான் மாசற்றவனாய் இருந்தேன்: தீங்கு செய்யா வண்ணம் என்னைக் காத்துக்கொண்டேன்.25 ஆண்டவர் என் நேர்மைக்பு உரிய பயனை அளித்தார்: அவர்தம் பார்வையில் குற்றமற்றவனாய் இருந்தேன்.26 மாறா அன்பர்க்கு மாறா அன்பராகவும் மாசற்றோர்க்கு மாசற்றவராகவும் நீர் விளங்குகின்றீர்!27 தூயோர்க்கு தூயோராகவும் வஞ்சகர்க்கு விவேகியாகவும் உம்மை நீர் காட்டுகின்றீர்.28 எளியோர்க்கு நீர் மீட்பளிக்கின்றீர்: செருக்குற்றோரை ஏளனத்துடன் நீர் பார்க்கின்றீர்.29 ஆண்டவரே! நீரே என் ஒளி விளக்கு! ஆண்டவர் என் இருளை ஒளிமயமாக்குகின்றார்.30 உம் துணையுடன் நான் எப்படையையும் நசுக்குவேன்: என் கடவுளின் துணையால் எம்மதிலையும் நான் தாண்டுவேன்.31 இந்த இறைவனின் வழி நிறைவானது: ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது: அவரிடம் அடைக்கலம்புகும் அனைவர்க்கும் அவரே கேடயமாய் இருக்கின்றார்.32 ஏனெனில், ஆண்டவரைத் தவிர வேறு இறைவன் யார்? நம் கடவுளைத் தவிர நமக்கு வேறு கற்பாறை ஏது?33 இந்த இறைவன் எனக்கு வலிமைமிகு கோட்டையமாய் உள்ளார்: என் வழியை பாதுகாப்பானதாய்ச் செய்தவரும் அவரே.34 அவர் என் கால்களை மான்களின் கால்களைப் போல் ஆக்குகின்றார்: உயர்ந்த இடத்தில் என்னை நிலை நிறுத்துகின்றார்.35 போருக்கு என்னை அவர் பழக்குகின்றார்: எனவே வெண்கல வில்லையும் என் புயங்கள் வளைக்கும்!36 பாதுகாக்கும் உம் கேடயத்தை நீர் எனக்கு வழங்னீர்: உமது துணையால் என்னை நீர் பெருமைப்படுத்தினீர்.37 நான் நடக்கும் வழியை நீர் அகலமாக்கினீர்: என் கால்களை தடுமாறவில்லை.38 எதிரிகளைத் துரத்திச் சென்று அழித்தேன்: அவர்களை அழித்தொழிக்கும் வகையில் நான் திரும்பவில்லை.39 நான்அவர்களை கொன்று அழித்தேன்: அவர்கள் எழுந்திருக்கவில்லை: அவர்கள் என் காலடியில் வீழ்ந்துகிடந்தார்கள்.40 போரிடும் ஆற்றலை எனக்கு அரைக் கச்சையாக அளித்தீர்: என்னை எதிர்த்தவர்களை எனக்கு அடிப்பணியச் செய்தீர்.41 எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தீர்: என்னை வெறுத்தோரை நான் அழித்துவிட்டேன்.42 உதவி வேண்டி அவர்கள் கதறினார்கள்: ஆனால் அவர்களுக்கு உதவ யாருமில்லை: அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினார்கள்: ஆனால் அவர்கள்களுகு ஆண்டவர் பதிலளிக்கவில்லை.43 எனவே நான் அவர்கழள மண்ணின் பழுதியென நசுக்கினேன்: அவர்களைத் தெரு சேறென மிதித்துத் தெறிக்கச் செய்தேன்.44 மக்களின் கலத்தினின்று என்னை விடுவித்தீர்: பிற இனங்களுக்கு என்னைத் தலைவாக்கினீர்: முன்பின் அறியாத மக்கள் எனக்கும் பணிவிடை செய்தனர்.45 வேற்று நாட்டவர் என்னிடம் கூனிக்குறிகி வந்தனர்: அவர்கள் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் எனக்குக் கீழ்படிந்தனர்.46 வேற்று நாட்டவர் உள்ளம் தளர்ந்தனர்: தம் அரண்களிலிருந்து நடுங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.47 ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்: என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவாராக! என் மீட்பின் கற்பாறையாம் கடவுள் மாட்சியுறுவாராக!48 எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவர்: மக்களினங்களைக் கீழ்ப்படுத்தியவரும் அவரே!49 பகைவரிடமிருந்து என்னை அழைத்து வந்தவரும் அவரே! என் எதிரிகளின் மேலாக என்னை உயர்த்தினீர்! என்னைக் கொடுமைப்படுத்தியவரிடமிருந்து நீர் என்னைக் காத்தீர்50 ஆகவே ஆண்டவரே! பிற இனத்தவரிடையே என்னைப் போற்றுவேன்: உம் பெயருக்குப் புகழ் மாலை சாற்றுவேன்.51 தாம் ஏற்படுத்திய அரசருக்கு வெற்றியை அவளிப்பவர் அவரே! தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கு அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே!


திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு    

Free counters!