யோவான் (அருளப்பர்) நற்செய்தி | ||||
|
||||
அதிகாரம் 1 |
||||
1. முன்னுரைப் பாடல் 1 தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. வாக்கு மனிதராதல் ![]() ![]() ![]() 2. முதல் பாஸ்கா விழா 19 எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, ' நீர் யார்? ' என்று கேட்டபோது அவர், ' நான் மெசியா அல்ல ' என்று அறிவித்தார்.20 இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.21 அப்போது, ' அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா? ' என்று அவர்கள் கேட்க, அவர், ' நானல்ல ' என்றார். ' நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா? ' என்று கேட்டபோதும், அவர், ' இல்லை ' என்று மறுமொழி கூறினார்.22 அவர்கள் அவரிடம், ' நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்? ' என்று கேட்டார்கள்.23 அதற்கு அவர், ' ″ ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது ″ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே ' என்றார்.24 பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள்25 அவரிடம், ' நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்? ' என்று கேட்டார்கள்.26 யோவான் அவர்களிடம், ' நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்;27 அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை ' என்றார்.28 இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.29 மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.30 எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்.31 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன் ' என்றார்.32 தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: ' தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன்.33 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ' தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர் ' என்று என்னிடம் சொல்லியிருந்தார்.34 நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன். 'திருமுழுக்கு யோவான் சான்று பகர்தல் (மத் 3:1 - 12; மாற் 1:7 - 8; லூக் 3:15 - 17) முதல் சீடர்களை அழைத்தல் 35 மறு நாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார்.36 இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி ' என்றார்.37 அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.38 இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு, 'என்ன தேடுகிறீர்கள்?' என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள், 'ரபி, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?' என்று கேட்டார்கள்.![]() ![]() பிலிப்பு, நத்தனியேல் ஆகியோரை அழைத்தல் 43 மறு நாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு, ' என்னைப் பின்தொடர்ந்து வா ' எனக் கூறினார்.44 பிலிப்பு பெத்சாய்தா என்னும் ஊரைச் சேர்ந்தவர். அந்திரேயா, பேதுரு ஆகியோரும் இவ்வூரையே சேர்ந்தவர்கள். 45 பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, ' இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர் ' என்றார்.46 அதற்கு நத்தனியேல், ' நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ? ' என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், ' வந்து பாரும் ' என்று கூறினார்.47 நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு, ' இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர் ' என்று அவரைக் குறித்துக் கூறினார்.48 நத்தனியேல், ' என்னை உமக்கு எப்படித் தெரியும்? ' என்று அவரிடம் கேட்டார். இயேசு, ' பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு நீர் அத்திமரத்தின்கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன் ' என்று பதிலளித்தார். 49 நத்தனியேல் அவரைப் பார்த்து, ' ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர் ' என்றார்.50 அதற்கு இயேசு, ' உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்? இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர் ' என்றார்.51 மேலும், ' வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்று அவரிடம் கூறினார். |
![]() |
|